Tuesday, 18 June 2024

மதம் மறந்து மனிதனை நினை

 நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்னே எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதும் திணிக்கப் பட்டது தான்...

சிறு வயது முதலே நம் அனைவருக்கும் ஒரு கட்டுப்பாடுடன் கூடிய நம்பிக்கையை ஊட்டி ஊட்டி வளர்த்து மதத்தின் மீதும் ஜாதியின் மீதும் ஒரு தீராத பற்றை உருவாக்கி நம் அடுத்த தலைமுறையையும் அதே போல வளர்த்து எடுக்க நம் மூளை வடிவமைக்கப் பட்டு விட்டது.

திருமணம் என்ற பந்தத்தில தான் இந்த ஜாதி மதம் என்ற நாச்சு விதை துளிர் விட்டு வளர்கிறது ..


மதத்தின் மீதும் ஜாதியின் மீதும் உள்ள பற்றானது,பக்தியானது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தனிச் சொத்து...

இந்த பக்தியில் உள்ள குறைபாட்டால் எக்காலத்திலும் அந்த தனிப்பட்ட மனிதனுக்கோஇல்லை இந்த சமுதாயத்துக்கோ எந்த ஒரு இழப்பும் இல்லை...


ஆனால் ஒழுக்கம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆன பொதுச் சொத்து இதில் நீ குறைபட்டு போனால் அந்த மனிதருக்கும் இந்த சமூகத்திற்கும் படு மோசம் தான்...


அதனால் ஒரு குழந்தைக்கு பக்தியை விட ஒழுக்கம் தான் கற்பிக்க வேண்டும்




அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...