Saturday, 21 October 2023

துரோகம் கொடியது

இன்றைய துரோகி நேற்றைய நண்பன் 

நாளைய துரோகி இன்றைய நண்பன் 

எதிரி உன் பலத்தைப் பார்ப்பான் 

உன் நண்பன் உன்னுடைய பலவீனத்தை பார்ப்பான்.

மரணத்தை விட துரோகம் வலி உள்ளது..

தகர்க்க முடியாத நம்பிக்கையும் உரம் ஏரிய உன் இதயமும் துரோகத்தால் ச்சுக்கு ச்சுக்காக உடைந்து நொருங்கும்.


எதிரியை விட நண்பனிடம் கவனமாக இரு

எதிரியின் ஈட்டி உன் நெஞ்சில் பாயும் முன் உன் நண்பனின் ஈட்டி உன் முதுகில் பாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்.



எதிரியை கூட விட்டுவை 

உன்னுடைய துரோகியை விடாதே 







Thursday, 19 October 2023

மழை உடலோடு சேர்த்து உள்ளத்தையும் நனைத்து விடுகிறது

 


கிழக்கின் பாதியை கட்டி கருமேகங்கள் சூழ்ந்து கனமாக சிரித்துக் கொண்டிருந்தன, மேற்கே இருட்டு மெல்ல தொடங்கும் நேரம் 

மழை இதோ இப்போ விழுந்துவிடும் என்று இருக்க அதற்குள் நாம் சென்று அடைந்து விடலாம் என்று வீட்டை நோக்கி மோட்டாரில் பயணித்து கொண்டிருந்தேன் .

மழை விழுந்தால் கொண்டு செல்லும் பொருள் உட்பட நானும் முழுமையாக நனைந்து விடுவேன் என்பதால் வேகமாக சென்று கொண்டிருந்தேன்.

நேரே செல்லும் சாலை சற்று தொலைவில் ஒரு ஆறு செல்வதால் ஒரு நீண்ட பாலம் பாலம் தொடங்குவதற்கு முன் ஒரு வேகத்தடை. பாலம் முடிந்ததும் பேருந்து நிறுத்தம் அதில் தேனீர் அருந்தி புகைத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள்.

ஒரு அற்றத்தில் இருந்து பெரும் பெரும் துளிகளாக விழ தொடங்கியது கண்ணிற்கு தெரிகிறது. இங்கிருந்து பார்க்கும்போதே தெரியும் உயரிய மலைகள் அதில் நெடிய மேகங்கள்...தன்னுடைய வீட்டிற்க்கு கும்பல் கும்பலாக பறந்து செல்லும் பறவைகள். மழை விழுந்ததால் அதற்கு ஒரு கவலையும் இல்லை எந்த சலனமும் இல்லாமல் இருப்பிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்க. நானும் பயணித்தேன் ..

ஓங்கி அகல வளர்ந்த அரச மரம் இளம்பச்சை வண்ணத்தில் தன் இலைகளை சிலிர்த்துக் கொண்டிருந்தது. மழையின் கோரப் பிடியில் அரசமரம் பார்ப்பதற்கே நெஞ்சை கட்டி இழுப்பதாய் இருந்தது.

மழை உடலோடு சேர்த்து உள்ளதையும் நனைத்து விடுகிறது

பொதுச்சொத்து

 போராட்டத்தின் போதோ ஒரு பிரச்சினையின் போதோ ஒரு சட்ட ஒழுங்கோ அல்லது சேதமோ உணர்ச்சி வசத்தில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படும் போது அரசியலமைப்பு சட்ட்படி குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.



Tuesday, 17 October 2023

தாய்

உன் தாயை மட்டும் அழவிடாதே
 உன் தாயின் கண்ணீரை கடவுள் கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்

நீ உன் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும்,எவ்வளவு புகழ் உன் காலடியில் சேர்ந்தாலும் உன்னை பார்த்து பொறாமை படாத ஜீவன் தாய் மட்டுமே...

Saturday, 14 October 2023

ரேஷன் கடை

 மூன்று ஊருக்கு ஒரு ரேஷன் கடை இருக்கிறது அப்படிதான் எங்கள் சிறிய ஊரில் நட்டம் நடுவாக ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது.

ரேஷன் கடையில் பொதுவாக பெண்கள் வரிசை அதிகமாக இருக்கும் 

கொஞ்சம் குழந்தைகள் கொஞ்சம் முதியவர்கள் வாய் பேசாமல் வரிசையில் நின்று தனக்கு உரிய சாதனத்தை வாங்கி செல்வார்கள்.

நம்முடைய குடும்ப அட்டையை வாங்கி என்ன என்ன வேண்டும் என்று கேட்டு கைரேகை வைத்து பதிவு செய்து ஒரு துண்டு சீட்டில் எழுதி தருவது ஒரு அதிகாரி.

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அடுத்து தான் இங்கு பிரச்சனை 

உரிய பொருளை நெருத்து தர ஒரு 50 55 வயது மதிக்கத்தக்க அளவுள்ள ஒரு பெரியவர் இருப்பார் அவருக்கு 50 kg எடையுள்ள சீனிப்பை அரிசிப்பை பருப்புப்பை எல்லாவற்றையும் இழுத்து உதவிசெய்ய ஒருவர் இருப்பார் இந்த உதவியாளர் பெரும்பாலும் அந்த ஊர்க் காரராக இருப்பார் ..மற்ற குறிப்பு எழுதும் அதிகாரியும் எடை போடும் அதிகாரியும் வெளியூர் காரராக இருப்பார்.

எடை நெருக்கும் தராசின் அளவு இப்பொழுதெல்லாம் எலக்ட்ரானிக் சிக்னல்.மிகத்துல்லியமாக காட்டும். பெரும்பாலும் யார் கண்ணிலும படாதவாரு வளைத்து வைத்திருப்பார்.

நம் மக்கள்தான் எந்த கேள்வியும் கேட்பதில்லையே. போடுவதை வாங்கி செல்வது வழக்கம்...

50 கிலோ சீனிப் பையில் 65 கிலோ சீனி இருக்கும் நம்ம எடைகாரர் எடை போடுவதை கவனித்தால்...

Tare என்ற ஒன்றே அந்த தராசில் உண்டு என்று ஒரு பாமர மக்களுக்கும் தெரியாது.ஆள் பார்த்து சாதனம் மக்களின் பைக்குள் செல்லும்..

வீட்டில் சென்று மறு எடை போட்டு பார்த்தால் குறைந்தது கால் கிலோ குறைவாக இருக்கும்.

முள்ளமாரித்தனம் சிறப்பாக வெளிப்படும் நமது எடைபோடும் மனிதர்களிடமிருந்து..பாவம் போல வரிசையில் நிற்கும் முதியவர்கள் குழந்தைகள் போடுவதை வாங்வாங்கிக்கொண்டு அமைதியாக செல்வதை கொஞ்சம் கவனித்தால் முள்ளமாரித்தனம் செய்யும் அயோகியர்களை என்ன சொல்லி திருத்துவது...

யாரை சொல்லி குற்றம் மக்களாகிய நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

கேள்விகள் கேட்க வேண்டும் 

ஒன்று கூட வேண்டும் 

நமது உரிமையை உணர வேண்டும் 

நாம் செய்வது தவறு என்று மனது உருத்த வேண்டும் 

அரசியல் புரிதல் வேண்டும் 

2 கிலோ சீனியா எனக்கு 10 கிராம் கூட அதிகமாக வேண்டாம் உரியதை கொடு என்று தைரியாமக கேட்கும் துணிச்சல் வேண்டும்.

துணிவே துணை...







Friday, 13 October 2023

அழகிய வண்ணத்துப் பூச்சிகள்


 அடர்பச்சை நிறத்தில் ஒரு கறிவேப்பிலை மரம் காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த நேரம் நான் எதேச்சையாக அந்த பக்கம் போகவே கறிவேப்பிலை பூவின் வாசம் மூக்கை சோதித்தது.சரி மூக்கால் வருடியது போதும் கண்ணால் சுவாசிப்போம் என்று பூவை பார்த்தேன்.

அழகிய பூவின் மேலே இளம்பச்சை நிறமா இல்லை, இளம் மஞ்சள் நிறமா என்று ஊகிக்க முடியாத ஒரு  மிருதுவான ஒற்றை வண்ண வண்ணத்துப் பூச்சி மெதுவாக அதன் சிறகை அசைத்து அசைத்து பூக்கு வலிக்காமல் அதன் தேனை உரிந்து கொண்டிருந்தது..அந்த அழகை ரசித்து கொண்டிருக்கும் போதே உயர்ந்த கிளைக்கு அலேக்காக பறந்து போவதை அண்ணாந்து பார்த்தேன் அதே வண்ணத்தில் எக்கச் சக்கமான வண்ணத்துப் பூச்சிகள்....

ஊடாகவே பல வண்ணங்கள் கலந்த வண்ணத்துப் பூசசிகளும் பள்ளியிடம் இருந்து பிரிந்து சென்ற வால் தரையில் எப்படி துடிக்குமோ அதைப்போல இந்த வண்ணத்துப் பூச்சிகள் வானத்தில் துடிப்பதைப் போல வெட்டி வெட்டி பறந்து கொண்டிருந்தது ..

பாலித்தீன் பூக்கள் மணப்பதில்லை

இயந்திர கண்கள் ரசிப்பதில்லை

இறுகிய பாறை உணர்வதில்லை

அமைதியாக புரிந்து கொண்டால் துன்பமில்லை...





பொறுமையை இழக்காதே

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
என்பது பழமொழி

கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
இதுவும் பழமொழி

இந்த பழமொழி எல்லாம் நம்ம வாழ்க்கைல எப்போ வேலை செய்யும் சொல்லுங்க..

யாருக்காவது ஒருத்தருக்கு அறிவுரை தேவையா ஓடி போய் சொல்லுவோம்...
இதுல வியாக்கியானம் வேற...

நம்ம வாழ்க்கைல, நம்ம பாதையில ஒரு சம்பவன்னா ஒன்னயும் கவனிக்கிறது இல்ல
தக்க தையா நு குதிக்குறது..

சரி பொறுமை னா என்னா ..?
நல்லதோ கெட்டதோ நா நினச்சது தா நடக்கணும் இது தா எல்லோரும் விரும்புறது.எசக்கு பெசக்குனு ஏதோ ஒன்னு மாரிச்சுனா வரும் பாருங்க ஒரு கோவம் பொறுமை எல்லாம் காலி...

நீ ஒவ்வொரு நாளும் போற வழியில கடவுளுக்கு காணிக்கை ஒன்னும் போடணும்னு வேண்டாம் ஆசையா ரெண்டு பச்சை இழையை பரிச்சி போட்டுட்டு போ..

ஏதாவது ஒரு விலங்குக்கு கொஞ்சமா ஒரு உணவு போட்டுட்டு போ

ஒரு கை உணவு இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டு போ..

இது எதுவும் பண்ண முடியலயா உன் வாயில இருந்து வர சொல்லு நல்லதா இருக்கட்டும்...இனிமையாக பேசிப் பழகு அது போதும்...





அமைதி இல்லாத மனம்


அமைதியைத்தேடி தேடி அலையும் நண்பர்களே அது உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது என்பதை எப்படி சொல்லி புரிய வைப்பேன்.

ஆழமாக வேர் விட்டு உயரமாக வளரும் மரம் இதமான காற்று வீசும்போது அங்கும் இங்கும் கும்பகோணம்  தலையாட்டி பொம்மையை போல ஆடும்..காற்று கொஞ்சம் பலத்து அடித்தால் டர் என்று முறிந்து விழும்,சில மரங்கள் தான் அப்படி விழும். 

வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஒழுங்காக கவனிப்பது இல்லயே, நம் மனதில் எழும் எண்ணங்கள் எல்லாம் எதைப்பற்றி உள்ளது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

எனக்கு ஒரு கை போனாலும் பரவாயில்லை என் அடுத்திருப்பவனுக்கு இரண்டு கையும் போய் விட்டால் அதில் கிடைக்கும் அமைதிக்கு ஈடே இல்லை..

உண்மையான அமைதி என்பது உன் மனம் காலை எழும்போதும் இரவு உறங்கும் போதும் நிறைவாக இருக்கிறதா அது அமைதி...

இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி மனம் பதறாமல் இருக்கிறதா அது அமைதி

கூட்டத்தில் உனக்கு பிடித்த நண்பர்களோடு இருக்கும்போது மட்டும் இல்லை நீ தனியாக இருக்கும் போதும் உன் மனம் கவலையில்லாமல் இருக்கிறதா அது அமைதி

இல்லாததை நினைத்து வருந்துவதற்கு மட்டும் உன் நேரத்தை செலவிடமால் உன்னை செதுக்குவதற்கு உன் பொன்னான நேரத்தை செலவிட்டால் அது அமைதி..

பிறர் மகிழ்ச்சியை பார்த்து நீயும் சிரித்தால் அது அமைதி

உண்டியலில் போடும் பணத்தை இல்லாதவனுக்கு கொடுத்தால் அது அமைதி

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அது அமைதி

வாழ்க்கை ஒரு தடவைதான் நண்பர்களே பணம் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்ட இந்த இயந்திர வாழ்க்கையில்  நாம் கிடைப்பதற்கு அரிதான அந்த அமைதியை தேடி கண்டுபிடித்து ஆயுள் முழுதும் தொலையாமல் நம்முடனே வைத்து கொள்ள வேண்டும் . 
 
நேரத்தை உங்களுக்காக செல்விடுங்கள் நீங்கள் தேடித்திரியும் அமைதி உங்களை தேடி வரும்...

அமைதியோ அமைதி

Tuesday, 10 October 2023

அனுபவம்

 அனுபவம் வயதைப் பொருத்தது அப்படிப்பட்ட அனுபவம் எளிதில் கிடைப்பதில்லை. தோல்வியும் துரோகமும் உங்களுக்கு உரிய வாழ்க்கையின் அடுத்த கட்ட பயன்படுத்தின் அனுபவத்தினை தரும் என்பது உறுதி

நேரம் பொன் போன்றது என்பார்கள் ஒவ்வொரு தனி நபரின் ஆரம்ப கால வாழ்க்கை நிகழ்வுகளை கவனித்துப் பார்த்தால் அது வெறும் சந்தோசத்தை மட்டுமே எதிர் பார்த்து இருக்கும். 

நேரத்தின் மதிப்பு ஒருவனுக்கு எப்பொழுது தெரிய வருகிறதோ அன்று இருந்து தான் வாழ்க்கை அனுபவத்தை உணர தொடங்குகிறது,அனுபவத்தை ஈர்க்க தொடங்குகிறது .

வீனாக்கப்பட்ட நேரம் அதன்பின் தொடரும் பயணத்தில் சற்று வலியோடு சேர்த்து வலிமையும் தரும்  உங்கள் கையில்.

படித்து உணர்வது பட்டறிவு இல்லை என்று பட்டு உணரும் போதுதான் தெரியும் போல...

எப்படிப் பார்த்தாலும் அனுபவமே சிறந்த ஆசான்

கவலை

 இன்றைய காலம் கலி காலம் என்று சொல்வதன் முக்கியமான காரணம் என்ன என்று சற்று பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால், நம் ஒவ்வொருவரையும் இதய பீடத்தில் ஆட்சி செய்வது பணம் தான்..

மாத வருமானம் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் வழிநடத்தும்..அப்படி மாத வருமானத்திற்கு அலைந்து திரியும் ஒவ்வொரு நபரும் படும் அல்லல் சொல்லில் அடங்காதது.

பட்ட இடத்திலே படும் என்பது போல தோல்வியும் துரத்தி துரத்தி விடாமல் கட்டி பிடிக்கும்..தோல்வி யாருக்குதான் தைரியத்தை கொடுக்கும் 

பெரிய பயத்தை கொடுக்கும் பயம் எதனால் என்று பார்த்தால் பணம் தான்..

பணம் தான் அனைத்தையும் இயக்குகிறது.கவலை மெல்ல மெல்ல தின்கிறது. இதயமே அமைதிகொள் 

திறமையை வளர்த்துக்கொள் கவலையை தவிர்த்துக்கொள்



Saturday, 7 October 2023

ஊஞ்சல் குழந்தைகள்

தங்கத்தை மஞ்சள் சேர்த்து அரைத்து  குழைத்து தெளித்தது போல சிதில் சிதிலாக மின்னும் மேகக் கூட்டத்தின் ஊடே பறவைகள் தன்னுடைய கூடை நோக்கி பயணம் செய்யும் ரம்மியமான காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த குழந்தைகளை பார்த்தேன்.

கீ கீ என்று கூட்டிர்க்குள் குதித்த  கிளியை அருகில் உள்ள புல்லை பறித்து இரண்டாக கிழித்து அதற்கு ஊட்டி விட்டுகொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

 பூத்துக்குலுங்கும் வண்ணப்பூக்கள் உள்ள பூங்கா ஆதலால் சுற்றி சுற்றி வந்த குழந்தைகள் வண்ண வண்ண பூக்களை சேகரித்து விளையாடியது. ஊஞ்சலை பார்த்த அந்த இரண்டு குழந்தைகளும் ஓடியது.

யார் முதலில் ஆட வேண்டும் என்பதற்கு சண்டையிட்டுக் கொண்டே அதற்கு ஒரு போட்டியையும் தீர்மானித்த குழந்தைகள் போட்டிக்கு ஓட்டப் பந்தயத்தை வைத்தது..

ஜெயித்த குழந்தை முதலில் ஆடும்போது இன்னொரு குழந்தை ஊஞ்சலை ஆட்ட மாறி மாறி ஆடினர்..

அருமையான நாள்...

Monday, 2 October 2023

இருட்டு

 உங்கள் இமைகளை நீங்கள் ஒவ்வொருமுறை சிமிட்டும்போதும் ஒரு பெரிய காரிருள் போன்ற ஒரு மையிருட்டு வந்து போவதை கவனித்திருக்குறீர்களா இரவில் எதேச்சையாக ஒளி இல்லாமல் ஆகும்போது பொறுமையாக ஆடாமல் அசையாமல் அந்த இருளில் உங்கள் இமைகளை திறந்து மூடுங்கள்..

நீங்கள் அதிசயித்துப் போவீர்கள்.இருள் உங்களுக்கு சொல்லித்தரும் பாடம் அதை கூர்ந்து உள்வாங்கினால் தான் தெரியும்.அதை அனுபவித்தாள் நிச்சயம் தெரியும்.

இன்றைய தகவல் தொடர்பு தொழில்நுட்ப காலத்தில், இயந்திற வாழ்க்கைமுறையில் நாம் ஒவ்வொருவரும் எந்த ஒன்றையும் ஒரு வினாடி உற்று கவனிப்பதில்லை.

நம் கண்முன் ஏதாவது ஒரு ஒளி விழுந்து கொண்டே இருக்கும் இரவு உரன்கிய பின் வரும் இருட்டு யாருக்கும் சிந்தையில் இருப்பது கடினம்தான்.

கண் பார்வை இல்லாதவர்களுக்கு இருட்டின் ஆழமும் அழகும் தெரியும்...


Sunday, 1 October 2023

மழைக்காலம் தொடங்கும்பருவம்

 வெயிலின் கோரப்பிடியில் கொஞ்சகாலம் தொடர்ந்து இருந்து வந்த நாம் மழைக்காக ஏங்குவது இயல்பு...அப்படி கொஞ்ச நாள் வெயிலுக்கு பிறகு பருவ காலத்தின் சுழற்சி மழைக்காலத்தை கண் முன் கொண்டுவரும்.

அந்த மழைக்காலத்தில் மண் மட்டும் அல்ல நம் இதயமும் அடி ஆழம் வரை நனையும்.

இந்த மழைக்காலத்தில் காடு கரைக்கு தினசரி சென்று வரும் நாயகர்கள் வெகுவாக இந்த இயற்கையிடம் இருந்து கற்பது ஏராளம்...ரசிப்பதற்கு ஏராளம் என்று தான் சொல்லலாம்..

இயந்திர வாழ்க்கை இந்த தலைமுறைக்கு ஒரு குறுகிய வட்டத்திற்குள் எப்படி வாழ்வது,குறுகிய வட்டத்திற்குள் வாழ்வது தான் மகிழ்ச்சி,அதை தாண்டி ஒன்றும் இல்லை தான் என்று நாளைய தலைமுறைக்கு சொல்லித்தருகிறது..

நம்முடைய வருங்கால தலைமுறை பிள்ளைகள் கற்பனை திறன் அற்றவர்களாக வளருகின்றார்கள் ..


அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...