Friday, 13 October 2023

அமைதி இல்லாத மனம்


அமைதியைத்தேடி தேடி அலையும் நண்பர்களே அது உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது என்பதை எப்படி சொல்லி புரிய வைப்பேன்.

ஆழமாக வேர் விட்டு உயரமாக வளரும் மரம் இதமான காற்று வீசும்போது அங்கும் இங்கும் கும்பகோணம்  தலையாட்டி பொம்மையை போல ஆடும்..காற்று கொஞ்சம் பலத்து அடித்தால் டர் என்று முறிந்து விழும்,சில மரங்கள் தான் அப்படி விழும். 

வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஒழுங்காக கவனிப்பது இல்லயே, நம் மனதில் எழும் எண்ணங்கள் எல்லாம் எதைப்பற்றி உள்ளது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

எனக்கு ஒரு கை போனாலும் பரவாயில்லை என் அடுத்திருப்பவனுக்கு இரண்டு கையும் போய் விட்டால் அதில் கிடைக்கும் அமைதிக்கு ஈடே இல்லை..

உண்மையான அமைதி என்பது உன் மனம் காலை எழும்போதும் இரவு உறங்கும் போதும் நிறைவாக இருக்கிறதா அது அமைதி...

இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி மனம் பதறாமல் இருக்கிறதா அது அமைதி

கூட்டத்தில் உனக்கு பிடித்த நண்பர்களோடு இருக்கும்போது மட்டும் இல்லை நீ தனியாக இருக்கும் போதும் உன் மனம் கவலையில்லாமல் இருக்கிறதா அது அமைதி

இல்லாததை நினைத்து வருந்துவதற்கு மட்டும் உன் நேரத்தை செலவிடமால் உன்னை செதுக்குவதற்கு உன் பொன்னான நேரத்தை செலவிட்டால் அது அமைதி..

பிறர் மகிழ்ச்சியை பார்த்து நீயும் சிரித்தால் அது அமைதி

உண்டியலில் போடும் பணத்தை இல்லாதவனுக்கு கொடுத்தால் அது அமைதி

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அது அமைதி

வாழ்க்கை ஒரு தடவைதான் நண்பர்களே பணம் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்ட இந்த இயந்திர வாழ்க்கையில்  நாம் கிடைப்பதற்கு அரிதான அந்த அமைதியை தேடி கண்டுபிடித்து ஆயுள் முழுதும் தொலையாமல் நம்முடனே வைத்து கொள்ள வேண்டும் . 
 
நேரத்தை உங்களுக்காக செல்விடுங்கள் நீங்கள் தேடித்திரியும் அமைதி உங்களை தேடி வரும்...

அமைதியோ அமைதி

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...