அரசனை நம்பி புருசனைக் கைவிடாதே
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்ன?
உண்மையான பழமொழி என்னவென்றால் "அரசினை நம்பி புருஷனை கைவிட்ட கதை".
இங்கு அரசு என்பது அரசமரத்தை குறிக்கும். அதிக அளவில் தூய பிராண வாயுவை வெளியிடுவதால் அரச மரத்தை சுற்றினாலோ, அதனருகில் தினம்தோறும் இருந்தாலோ பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதற்காக புருஷன் (கணவன்) இல்லாமல் குழந்தை பிறக்குமா என்ன. அது போல, நம் வேலைக்கு ஒரு சில காரணிகள் துணையாக இருக்கலாம். ஆனால், நாம் செய்யவேண்டியதை செய்யாமல் போனால் அவை பயன்படா.
இதைக் குறிக்க வந்ததே இந்த பழமொழி.













