Wednesday, 27 September 2023

கரும்பு ஜூஸ் வியாபாரம்

கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பதால் கடைக்கு தேவையான கரும்பை சந்தைக்கு போய் வாங்கி வருவது வழக்கம்..கடையில் உள்ள கரும்பு தீர்ந்து விட்டது..சந்தையில் கரும்பு லோடு வந்திருக்கிறது என்பதை WhatsApp status பார்த்து தெரிந்து கொண்டு ,என்றைக்கு கரும்பை வாங்க செல்லலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்வதற்கு உரிய ஆட்டோ வை பதிவு செய்து கிளம்புவது தான் வழக்கம்.அப்படித்தான் இன்று காலை சென்று கரும்பையும் வாங்கிக்கொண்டு எலுமிச்சை இஞ்சி மிளகாய் எல்லாம் வாங்கிகொண்டு சந்தைக்கு உரிய வாடகையும் செலுத்தி விட்டு சரி வருமானத்தை பார்க்கலாம் என்று வெளியே வந்தால் ஓஓ ஓ என்று மழை...

மழை வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சந்தோசம்...வியாபாரிகளுக்கு...?


நேர்காணல்

 மனம் பலவீனமானவர்கள் படும் பாட்டுக்கு ஒவ்வொரு நேர்க்காணலும் கொஞ்சம் சிர்த்துக்கொள்ளும்..அதிலும் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் ஊர் விட்டு ஊர் வந்து நாய் காவல் கடந்து பசியோடு மட்டும் வீட்டுக்கு செல்லும் ஓவ்வொரு பட்டதாரியும் மனம் உடைவது நிச்சயம்..ஏதாவது ஒரு அற்புதம் நடந்து விடாதா என்று ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்..


திறமைகள் தான் பற்றாக்குறை மற்றபடி வேலைகள் இங்கு ஏராளம்





Thursday, 21 September 2023

பொழுதுபோக்கு

 இன்றைய கால சூழ்நிலையில் மக்கள் ஒவ்வொரு நாளையும் ஏதோ காலை வந்தது இரவு முடிந்து என்று ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் கழிக்கின்றனர் (பெரும்பாலானோர்)

நம்முடைய பொழுதுபோக்கு நமக்கும் நம்முடைய சமுதாயத்துக்கும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் 

கவலை படுவதற்கு மட்டும் நேரம் சரியாக இருக்கிறது..இதில் எங்கு பொழுதுபோக்கு...அப்படியே பொழுதுபோக்கு இருக்கிறது என்றால அது முற்றிலும் scroling செய்து நேரத்தை கழிப்பது தான்...

பயனுள்ள வகையில் தன்னுடைய நேரத்தை செலவழித்து அறிவை வளர்த்து இனிவரும் தலைமுறைக்கு நல்ல சமுதாயத்தை விட்டு செல்வது தான் நம் ஒவ்வொருவருடைய பொழுது போக்காக இருக்கவேண்டும்




அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...