Monday, 27 November 2023

பணம் மனிதாபிமானத்தை மறந்துவிடும்

வருடாந்திர கடன் வாங்கிய விவசாயி ஆண்டு இருதியில் தான் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் வட்டி போட்டு வசூல் செய்வது வங்கியின் ஆண்டாண்டு கால நியதி..அப்படி தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது .

நாள் நெருங்கும்போது வங்கியில் இருந்து ஒரு விண்ணப்பம் செல்கிறது..

தாங்கள் வாங்கிய பணத்தை உரிய தியதிக்குள் திரும்ப செலுத்துங்கள் என்று...

விவசாயியும் படிக்கிறார்,நாள் நெருங்குவது கடனை வாங்கிய விவசாயிக்கு தெரியாமலா இருக்கும் 

அவரும் திரும்ப செலுத்தும் மனநிலையில் தான் உள்ளார்... பாதிக்கு அதிகம் பேர் யாரும் தன்னை கை நீட்டி கேள்வி கேட்கும் படி ஆகிவிட கூடாது எனும் மனநிலையில் உள்ளவர்கள் தான் (குறிப்பாக அந்த காலத்து வார்த்தையே வாக்கு என்று வாழ்ந்தவர்கள்)

இப்பொழுது அந்த மனநிலை குறைவு தானே..

உழைத்து சேமித்த பணத்தை மனைவி கொடுக்க தன்னுடைய சைக்கிளில் 2 கிலோ மீட்டர் மிதித்து பணத்தை உரிய வங்கியில் சேர்க்கிறார் .

பணம் பெறுபவர் 500 ரூபாய் தாள்கள் 200 ரூபாய் 100 ரூபாய் தாள்கள் 50 ரூபாய் தாள்கள் 20 ,10 ரூபாய் தாள்கள் என்று பணம் என்னும் இயந்திரத்தில் போட்டு எண்ணி கடிதத்தில் எழுதி கூட்டி பார்க்கிறார்..

எண்ணி பார்த்து விவசாயியை பார்க்கிறார் பணம் எண்ணுபவரின் முகத்தில் ஒரு பதட்டம் தெரிகிறது மறுபடியும் நிதானமாக கூட்டுகிரார் ,விவசாயியை பார்க்கிறார் அதே பதட்டம் அங்கும் இங்கும் பார்க்கிறார் 

பணம் அடைத்து விட்டதாக உள்ள ரசீதை சீல் வைத்து சிரித்த முகத்தோடு குடுத்து அனுப்புகிறார் .

விவசாயியின் முகத்தில் ஒரு ஆனந்தம் தெரிகிறது.நாம் உழைத்து கடனை கட்டி விட்டோம்.இனி நிம்மதியாக இருக்காலாம்..கடன் இல்லா வாழ்க்கை நிம்மதி தானே...

மறுபடியும் தன்னுடைய சைக்கிளை எடுக்கிறார்..நிதானமாக நிம்மதியாக தன்னுடைய வண்டியில் வீடு செல்கிறார்..மனைவியின் முகத்தில ஒரு பதட்டம் ...

ஏன் அந்த பதட்டம்...?

விவசாயி திகைக்கிறார்....!

தான் கொடுத்த பணத்தில் அதிகமாக 5000 ரூபாய் பணம் இருந்ததாக அடித்து சொல்கிறார்...

விவசாயிக்கு மூச்சே நின்றுவிடும் போல பதட்டமடைகிரார்...!;

மிதிவண்டி பறக்கிறது,இதயம் அடிக்கிறது வியர்வை தெரிகிறது...

வெயிலில் பயணம்...விவசாயியின் மனதில் பயம் குடி கொள்கிறது...

இனி சென்று எப்படி பேசுவது,

உழைத்த பணம் 1 ரூபாய் என்றாலும் தன் கையை விட்டு உண்ணாமல் தொலைத்தால் வலி உயில் போகும்(களவாடல் செய்த பணம் பறி போனாலே கடினம்தான்)

கிடைக்குமா கிடைக்காதா...!

எண்ணி குடுக்காதது நம் தவறு ..;

விவசாயியின் மனது ஓடுகிறது எண்ணும் போது பணம் வாங்கியவரின்முகத்தில் இல்லாத பதட்டம் எண்ணி முடித்த பிறகு வந்தது ...

கண்டிப்பாக ஏதோ தவறு உள்ளது ...!

எப்படி கேப்பது என்ன சொல்வார்...

செல்கிறார்..

உள்ளே நுழைந்த உடன் முகமும் முகமும் சந்திகிறது....

பார்த்த உடன் மலுப்பலாக பேசி பணத்தை திரும்ப கொடுக்கிறார்...

நீங்கள் சென்ற பிறகுதான் பார்த்ததாக ஊழியர் சொல்கிறார்...

கிடைத்து விட வேண்டும் என்று சென்ற பெரியவர் எந்த பதிலும் பேசாமல் புன்னகைத்தவாறே வாங்கிக்கொண்டு வெளியில் செல்கிறார்...

{இதே பணத்தை செலுத்தும் போது 100 ரூபாய் குறைவாக இருந்திருந்தால் சட்டையை பிடிக்கும் ஊழியர்கள் அதிகமாக இருந்தால் திரும்ப கொடுங்கள்}

உழைத்த பணம் 

மனிதாபிமானம் சின்ன சின்ன செயல்களிலும் உள்ளது

Sunday, 26 November 2023

சிந்திப்பதே கடினமான வேலை

 


சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் 

சிந்தித்து கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள் 

பாதி சிந்தனை பாதி செயல் என இருப்பவர்கள் இருக்கிறார்கள் 

சிந்திப்பதை விட மரணமே பெரியது என்றும் இருக்கிறார்கள்....

சிந்தனை என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள்...

எந்த ஒரு செயலுக்கும் சிந்தனை தான் தொடக்கம், எது ஒன்றை திரும்ப திரும்ப செய்கிறோமோ சிந்தனை செய்கிறோமோ,காலப்போக்கில் அந்த செயலை,சிந்தனையை எளிமையாக கையாள முடியும்...

அது வழக்கமாகி விடுகிறது...

நல்ல விதமாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் 

கெட்ட விதமாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள்...நல்ல விதத்தில் சிந்திப்பது , தலைகீழாக இருந்து தண்ணீர் குடிப்பதை விட கடினமானது.

கடினமானதாக இருந்தாலும் அதை பழக்கமாக ஆக்கி,வழக்கமாக ஆக்கினால் எளிமையாக ஆகி விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது...



தலைவன் மேதகு பிரபாகரன் பிறந்த நாள்

 



தலைவன் என்பவன் உப்பைப் போல தன்னை தண்ணீரில் கரைத்து சுவையை தருபவனாக இருக்க வேண்டும்..

தன்னை உருக்கி உலகிற்கு வெளிச்சத்தை தரும் மெழுகுவர்ததியாக இருக்க வேண்டும்...

போராளி என்பவன் போராடுவதற்கு ஆட்களை தயார் செய்வான்..

போராளியாகவும் இருந்து போராட ஒரு இயக்கத்தை கட்டி அமைத்து சம காலத்தில் நிறுவிய தலைவன் பிரபாகரன் அவர்கள்..

தனி மனிதனின் போராட்ட வரலாறு, ஒரு இயக்கத்தின் வடிவமாக உருவெடுத்து இன்று உலகத் தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற வரலாறாக உருவெடுத்து, இன்று ஒவ்வொரு தமிழ் மகனும்,மகளும்  கொண்டாடும் ஒரு தலைவனாக சிறு பொறியாக மாறி உள்ளது...

அந்த பொறியை பெரு நெருப்பாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை...

தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

#தலைவர்69

#பிரபாகரன்



Friday, 24 November 2023

வேலையில் உருதியின்மை

 வேலையில் இருதியின்மை...

பெரும்பாலும் இன்றைய 90s குழந்தைகள் தான் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பார்கள் என்று என்னுடைய கருத்தை எழுதுகிறேன்...

நானும் ஒரு 90s தான்....

படித்து முடித்து வெளிவரும் போது தான் வாழ்க்கையின் நெளிவு சுளிவு தெரிய வருகிறது, வெறுமனே பட்டப்படிப்பை மட்டுமே வைத்து உழைத்து வருமானம் ஈட்டி விட முடியாது என்ற நிலைமை தெரியவரும் நேரம் பல வருடங்களை கடந்திருப்போம்.!!!  அங்கு 2 வருடம் இங்கு 2 வருடம் என்று ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் என்று,நிலையாக ஒரு வேலை இல்லாமல் தவித்துகொண்டு இருக்கும் மக்கள் அதிகம் பேர்...

யாரும் வந்து உதவமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளும் நேரம் நாமாக முடிவெடுத்து வேலை நிமித்தமாக பணத்தை கட்டி வெளிநாட்டுக்கு சென்று பணத்தையும் இழந்து,சொன்ன வேலையும் இல்லாமல் படும் கஷ்டம் சொல்லி மாளாது....

இனிவரும் காலம் மிக கடினமானது...

நம் கல்வி முறை அப்படி...

Tuesday, 14 November 2023

பொன் செய்யும் மருந்து


 மனித மனம் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது..கொஞ்ச நேரம் அமைதியா இருக்குமா...? ரொம்ப ரொம்ப கஷ்டம்...இயல்பாகவே நம்ம மனது நம்ம நிறைகளை நினைத்து பெருமை படரதோ,மகிழ்ச்சியா இருக்குறதோ இல்ல 

மனது குழப்பமா இருக்குதுனா தனிமைப் பழகு 

மனது காயப்பட்டு இருக்குதுனா மவுனம் பழகு 

மனிதன் தன்னுடைய நிராகரிப்பின் போதும் அவமானத்தின் போதும் தான் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்பதே தெரிந்து கொள்கிறான்.. 

அதே போல் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைப்பதே அவன் அடைந்த அவமானங்களும் நிராகரிப்புகளும் தான் .

அதனால 

எப்ப பாத்தாலும் நண்பர்கள், உறவினர்கள் னு பரபரப்பா நாள் ஓடிட்டு இருக்கும் போதே கொஞ்சம் தனிமை கத்துகிட்டின்கனா நல்லது...

மன அமைதியா மகிழ்ச்சியா இருக்கும் போதே கொஞ்சம் மவுனமா இருக்குறதுக்கும் பழகிட்டின்கனா ரொம்ப நல்லது...

அறிவு இலவசம் ஆனா நேரம் செலவழிககனுமே 



அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...