Saturday, 27 January 2024

கடலுக்கு உண்டு தமிழுக்கு இல்லை கட்டுப்பாடு

 தமிழை நாம் உயர் தனி செம்மொழி என்கிறோம் 

இப்பொழுது உள்ள அரசியல் கால சூழ் நிலையில் நாம் தமிழ் மொழியை பேசுகிறோமா .. இல்லை என்பது தான் பதிலாக உள்ளது . 

நாமே நமது தாய் மொழி தமிழை பேச வில்லை என்றால் நமது தலைமுறை பிள்ளைகள் எங்கனம் தமிழ் பேசுவார்கள் ..??????

ஆக நம்மால் பேசமுடிய வில்லை தமிழ் பேசினால் அசிங்கம் அவமானம் என நம்முடய அக்கம் பக்கத்தவர் நினைக்கும் நிலை உருவாகி விட்டது 

உருவாக்கி விட்டார்கள் என நினைக்கிறேன் ஆளும் கட்சிகள் சுயநலம் பார்த்ததன் விளைவு நாம் தமிழ் மொழி இழிவு என நினைத்துக் கொண்டு அயல் மொழிகளை பெருமையாக சாதனையாக நினைக்கிறோம் .. 

தமிழ் வரலாறுகளினை தேடி தேடி படித்து நாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டும்.. 

குறைந்த பட்சம் நம்முடைய பதிவுகளை தமிழில் பதிவிடலாம் 

நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களினை வைக்கலாம் .. 

தமிழ் வளர்க்கும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம் 

தமிழ் வாழ்க ..!!!!!

Friday, 26 January 2024

வீங்கியவன் சாவான் தூங்கியவன் வாழ்வான்

 வீங்கியவன் சாவான் தூங்கியவன் வாழ்வான் 


நோய் இல்லாத வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு 

உண்ணுவது அமிர்தம் ஆக இருந்தாலும் அளவு கூடாமல் உண்ண வேண்டும் இல்லை எனில் நாம் உண்ணும் அமிரதமே நஞ்சாகி நம் உயிரை பறித்து விடும். 

அளவுக்கு அதிகமாக உண்டு வயிறு பருத்து தொந்தி வீங்கி பருத்து தொங்குவதை தான் வீங்கியவன் என சொல்லப்படுகிறது வயிறு எப்பொழுதும் அடக்கமாக இருப்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் காலப்போக்கில்  நோய்கள் அதிகமாக உருவெடுக்கலாம் 

உணவை மருந்து எனவே நல்ல உணவை தேடி உண்ணுங்கள் உடலுக்கு தேவையான உணவை உடல் சீதோஷன நிலைக்கு உகந்த உணவை உண்ணுதல் மிக நல்லது 

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 

எனவே உங்கள் உடலை நீங்கள் தான் கவனிக்க வேண்டும் 

சத்தான உணவை உண்ணுங்கள் 

Friday, 19 January 2024

சிக்கல்களை கையாளுங்கள்

 சிக்கல் தான் ஒரு மனிதனை திறன் படைத்தவனாக்கும் . 

சிக்கல்கள் தான் ஒரு மனிதனை அடுத்த கட்டத்திரக்கு எடுத்து செல்லும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை 

போகும் பாதையில் இடர்கள் இல்லையேல் ஆளுமை என்பது குறைந்து விடுகிறது .. 

நாம் நினைக்கலாம்!!!!!  சிக்கல் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் என்று ..;

ஆம் சிக்கல் தான்.. 

மனிதன் மூளை சற்று சிக்கலானது தான் !!!!..  

சிக்கல்களை தீர்ப்பது தான் மனிதனுக்கும் , மனித மூளைக்கும் உரித்தான ஆகச்சிறந்த பண்பு 

மனிதனின் குணம் இப்பொழுது உள்ள கால சூழலில் எப்படி உள்ளது .. ???

பிரச்சனைகளும்,சிக்கல்களும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என உணர்ந்து தன்னுடைய வாழ்க்கையினை வாழ்ந்து காட்ட வேண்டும்.

என்றும் வானம் நீலமாக இருக்கும் என்றோ வாழ்க்கைப் பாதை நிறைய பூக்களாக பூத்திருக்கும் என்றோ கடவுள் வாக்களிக்கவில்லை 

மழையில்லாத வெயிலோ கவலையில்லாத  மகழ்ச்சியோ வேதனையற்ற சமாதானமோ உண்டாகும் என்றும் கடவுள் வாக்களிக்கவில்லை 

Thursday, 18 January 2024

அன்பு தான் ஒருவனை சாந்தப்படுத்தும்

 அன்பு இல்லையேல் அங்கு எதுவும் இல்லை 

இங்கு உதாரணமாக நாம் ஜல்லிக்கட்டில் வரும் மாட்டை எடுத்துக்கொள்வோம் 

மாடு வெளிவரும் இடத்தை சுற்றி மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடிக்க தயாராக இருப்பார்கள் . மாடு முரண்டு பிடிக்கும் தன்னை சுற்றி வரும் வீரர்களை பார்த்து பயப்படும் . 

யாரையும் தன்னை நெருங்க விடாமல் தன் சீற்றமிகு தோரணையாலும் ,பொழிவு மிகுந்த கொம்புக்கலாலும் நாளாப் பக்கமும் வீரர்களை விரட்டி அடிக்கும் . அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட மாடு வெகு சினத்துடன் காணப்படும் .. மாட்டை யாரும் அடிக்காததால் மாடும் வெற்றி பெற்ற மாடு என அறிவிக்கப் படும் 

அதை சமயம் தோரத்தில் இருந்து ஒரு பெண்மணி சீனத்துடன் இருக்கும் அந்த மாட்டின் அருகில் வந்து நெற்றியை மிருதுவாக தடவி விட்டு அவள் கொண்டு வந்த கயிரை மாட்டின் கழுத்தில் எந்த வித பய பீதி இல்லாமல் மாட்டை அமைதியாக அழைத்து செல்வாள் 

மாடும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவள் காட்டிய திசையில் வரும் ..  

அதுவரை சீறிப்பாய்ந்த மாடு அமைதியாக செல்லும்.. அதற்க்கு காரணம் அதுநாள் வரை அவள் அந்த மாட்டை வளர்த்த விதம் . அவள் காட்டிய அக்கறை,உபசரிப்பு எல்லாம் இதில்  அடங்கும்..  

எப்பேர்ப்பட்ட மனிதனையும் மிருக்கத்தையும் அன்பு மாற்றும் 


Wednesday, 17 January 2024

அப்துல்கலாம் வேலை பொழுதில் நிகழந்த ஒரு சம்பவம்

 மனம் பாறை போல உறுதியாக இருக்க வேண்டும் 

எஸ் எல் வீ 3 ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 1979 ஆகஸ்ட் 10 ல் விண்ணை நோக்கி செந்தரு பூமியின் சுற்றுவட்ட பாதையை அலங்கரிக்க போகிறது என செய்தி வந்தாகி  விட்டது 

ஏவுகனை நான்கு அடுக்கு உடையது. அனைத்து பாகம் உட்பட அதன் கண்காணிப்பு , மோட்டார் வசதி, எரிபொருள் எலெக்ட்ரானிக் சாதனம் உட்பட அனைத்தும் நம் நாட்டில் தயார் செய்து விண்ணில் பறக்க போகிறது 

நாடே கவனிக்கும் நிகல்வு காலை 7.58 க்கு நடக்கிறது 

அப்துல் கலாம் தான் திட்ட இயக்குனர் பொட்டு தூக்கம் இல்லாமல் வாரக்கணக்கில் உழைத்த அயர்வு கண்ணில் இல்லை . 

முதல் இரண்டு கட்ட மோட்டார் சரியாக வெற்றிகரமாக இயங்க அடுத்த கட்டமாக ராக்கெட் செயல் இழந்து கடலில் விழுகிறது 

23 மீட்டர் உயரமும் 17 டன்  எடையும் உடைய ராக்கெட் 317 வினாடிகளில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்தது 

எல்லோருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்,கவலை, விரக்தி 

ஆய்வுக்குழு அமைக்கப்படுகிறது. அதில் ராக்கெட் கடலில் விழுவதற்கு காரணங்கள் ஆராய படுகிறது அதில் ராக்கெட்டின் 3 வது கட்டதில் எரிபொருளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வில்லை கூடுதலாக ஆக்ஸிஜன் வழங்கும் nitric அமிலம் அடங்கிய டாங் கில் கசிவு இருந்தது தெரிய வருகிறது 

ஆய்வு அறிக்கை முடிந்ததும் குழு கூடுகிறது அதில் விஎஸ்எஸ்சி இயக்குனர் பிரம்ம பிரகாஷ் அவர்கள் திட்டம் தோல்வி அடைந்ததர்க்கான காரணம் தொழில் நுட்ப கோளாறு தான் என முன்மொழிகிறார் 

மிகவும் மன சோர்வாக இருந்த அப்துல் கலாம் உடனடியாக எழுந்து கூட்டத்தின் நடுவில் வந்து பேராசிரியர் தவானிடம் சார் தொழில்நுட்ப காரணங்களை சொல்லி எனது நண்பர்களிடம் தோல்வியை நியாய படுத்தினாலும் திட்டதிர்க்கான தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் . 

ராக்கெட் ஏவ கவுண்டவுன் தொடங்கும்போதே nitric அமிலம் கசிவது தெரிந்தது . உடனே திட்டத்தினை நிறுத்திருக்க வேண்டும் என கூறினார் 

பிரம்ம பிரகாஷ் அவர்கள் அமைதியாக கூறியது என்ன தெரியுமா கலாம் கூடிய விரைவில் சுற்றுவட்டப்பாதையில் இருப்பார்.. 

கலாமின் கனவும் நிறைவேறியது .. அதற்க்கு கலாமின் அயராத  உழைப்பும்       முயற்சியும் அளப்பரியது 

சிங்கம் போல ராஜாவாக இரு

 சிங்கம் காட்டிற்க்கு ராஜாவாக இருப்பது எல்லோரும் அறிந்ததே நீ சிங்கமாய் இருக்க ஆசைப்படு 

கற்றுக்கொள்வதில் நீ சிங்கமாக இருக்க வேண்டும் என்பது தான் உன்னுடைய ஆசிரியருக்கும் உன்னுடைய பெற்றவர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசையாக இருக்கும்   

தெருவின் ஓரங்களில் சுற்றித் திரியும் "நாய்" கூட்டங்களை பார்த்து இருந்தால் ஒன்றை கவனித்து இருப்பீர்கள் . அந்த நாய்களுக்கு முன்னால் யேதாவது ஒன்றை தூக்கி வீசி பாருங்கள், அந்த நாயானது நீங்கள் தூக்கி போட்ட பொருளை தேடி ஓடும் . அது நாயின் இயல்பு 

நீங்கள் சிங்கத்தின் குணத்தை அறிந்து வைத்திருந்தால் நிச்சயம் தெரியும் சிங்கத்தின் குறி நீங்கள் போடும் பொருளை பார்த்து இருப்பது இல்லை அதன் குறி தெளிவாக அதை வீசுபவரை பார்த்து இருக்கும் 

உன்னுடைய வாழக்கையிலும் அப்படி தான் நீ என்ன செய்தாலும் குற்றம் குறை கண்டுபிடிக்க ஒரு கூட்டமே உன்னை சுற்றி இருக்கும். உன்னை சுற்றி உள்ள அனைவரும் உன் எண்ண ஓட்டதிர்க்கு உடன் பட வேண்டும் என நீ நினைத்தால் அதற்க்கு கனவிலும் "சாத்தியம்" இல்லை 

உன்னிடம் நீயே சொல்லிக்கொல்  

மாணவனாக இருந்தால் கற்பதில் அதி ஆர்வம் காட்டு 

நண்பர்களில் நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொள் 

வேலை இடங்களிலும் கற்றுக் கொள் அறிவை பெருக்கி கொண்டே இரு மகிழச்சி தரும் செயல்களை தவிர்க்காமல் செய் நேர்மறை எண்ணங்களை தினம் தினம் சிந்தி கெட்ட  விஷயங்களிலும் நல்லதை பார் 

எழுத்திலும் பேச்சிலும் சிந்தனையிலும் புத்துணர்ச்சி உடன் இருந்து செயல்படு 

Tuesday, 16 January 2024

ஜார்ஜ் பெர்னாட்ஷா எழுதிய ஒரு வாசகம்

 ஜார்ஜ் பெர்னாட்ஷா பற்றி உங்களில் பெரும்பாலான பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்...

அவர் எழுதிய ஒரு வாசகம் என்னை கவர்ந்தது போல உங்களையும் கவரும் என்ற ஆவல் உள்ளதால் பதிவிடுகிறேன்...

அந்த தகவல் என்ன என்றால்..


இந்த உலகில் உள்ள எல்லா தரப்பு மக்களும்,அதாவது நல்லவர்கள் கெட்டவர்கள் உட்பட எல்லா மனிதர்களும் உலகிற்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொள்கிரார்கள்...பிறவிக்கடன் என்பது வாழ்க்கையை அனுபவிப்பது தன் குடும்பம் தன் மகன்,தன் மனைவி,தன் கணவன் என்ற சுயநல மதிப்பீடுகளை மட்டும் கொண்டு செயல் படுகிறான்...

மது மத சினிமா போதைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் தானும் கெட்டு தன்னுடன் இருக்கும் மனிதர்களையும் கெடுக்கிறான்....

பணத்தால் மட்டும் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்று பேராசைப் படுகிறான்..

காமத்தால் தானும் கெட்டு பிற குடும்பங்களையும் அவமான படுத்துகிறான்...

இயற்கையை நேசிககாமல் அதை அழிக்கும் மனிதர்களுக்கு எதிராக குரல் குடிக்க திறன் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறான் ..

குற்ற சம்பவங்களை ரசிக்கிறான்

எதிர்கால தலைமுறை யை யோசிப்பதில்லை....

நாட்டுப்பற்று மொழிப்பற்று இனப்பற்று இல்லை அவனுக்கு...


ஆனால் சில முரண்பட்ட மனிதர்கள் உள்ளார்கள்.அந்த மனிதர்கள் மட்டுமே தாங்கள் விரும்பிய வண்ணம் இந்த உலகத்தை மாற்றியமைக்க சளைக்காமல் பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள் 

எதிர்கால தலை முறை ஊக்கதுடனும் அறத்துடனும்...மனிதர்களை மதித்து நடக்கவும் சூழலை பாதுகாக்கவும்,பசி பஞ்சம் பட்டினி இல்லாமல் மக்கள் வாழவும்...

கல்வி மருத்துவம் சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கும் படி ஒரு உயரிய கட்டமைப்பை உருவாக்கவும் 

மக்கள் மனித நேயத்துடன் செயல்படும் வழிமுறைகளை உருவாக்கும் படியும் சிந்திக்கிறான் 

உண்மை என்ன என்றால் இந்த உலகம் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமை கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றது



nallavarkalaa illai kettavarkala....?

oruvan nallavanaaga thodarvathum , kettavanaaga maaruvathum anthatntha soolnilaikalai poruthu than entraal athai purinthu kolpavarkal migavum silar than

nee evvalavu than nallavanaga irunthalum oru silaruku ne kettavanaga theriya koodum

padithavarkal nammai sutri irukum pothu ketta kaariyankal nadaiperaathu entru innum neenkal nambikondiruntaaal mikavum varurtham than ...yaen entral padikkatha nallavarkalaal than innum manitha neyam saagaamal irukkirathu.....

suyanalam nammai aattii padaikaamal irunthaal naam ovvoruvarum nallavarkalae

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...