அன்பு இல்லையேல் அங்கு எதுவும் இல்லை
இங்கு உதாரணமாக நாம் ஜல்லிக்கட்டில் வரும் மாட்டை எடுத்துக்கொள்வோம்
மாடு வெளிவரும் இடத்தை சுற்றி மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடிக்க தயாராக இருப்பார்கள் . மாடு முரண்டு பிடிக்கும் தன்னை சுற்றி வரும் வீரர்களை பார்த்து பயப்படும் .
யாரையும் தன்னை நெருங்க விடாமல் தன் சீற்றமிகு தோரணையாலும் ,பொழிவு மிகுந்த கொம்புக்கலாலும் நாளாப் பக்கமும் வீரர்களை விரட்டி அடிக்கும் . அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட மாடு வெகு சினத்துடன் காணப்படும் .. மாட்டை யாரும் அடிக்காததால் மாடும் வெற்றி பெற்ற மாடு என அறிவிக்கப் படும்
அதை சமயம் தோரத்தில் இருந்து ஒரு பெண்மணி சீனத்துடன் இருக்கும் அந்த மாட்டின் அருகில் வந்து நெற்றியை மிருதுவாக தடவி விட்டு அவள் கொண்டு வந்த கயிரை மாட்டின் கழுத்தில் எந்த வித பய பீதி இல்லாமல் மாட்டை அமைதியாக அழைத்து செல்வாள்
மாடும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவள் காட்டிய திசையில் வரும் ..
அதுவரை சீறிப்பாய்ந்த மாடு அமைதியாக செல்லும்.. அதற்க்கு காரணம் அதுநாள் வரை அவள் அந்த மாட்டை வளர்த்த விதம் . அவள் காட்டிய அக்கறை,உபசரிப்பு எல்லாம் இதில் அடங்கும்..
எப்பேர்ப்பட்ட மனிதனையும் மிருக்கத்தையும் அன்பு மாற்றும்
No comments:
Post a Comment