மனம் பாறை போல உறுதியாக இருக்க வேண்டும்
எஸ் எல் வீ 3 ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 1979 ஆகஸ்ட் 10 ல் விண்ணை நோக்கி செந்தரு பூமியின் சுற்றுவட்ட பாதையை அலங்கரிக்க போகிறது என செய்தி வந்தாகி விட்டது
ஏவுகனை நான்கு அடுக்கு உடையது. அனைத்து பாகம் உட்பட அதன் கண்காணிப்பு , மோட்டார் வசதி, எரிபொருள் எலெக்ட்ரானிக் சாதனம் உட்பட அனைத்தும் நம் நாட்டில் தயார் செய்து விண்ணில் பறக்க போகிறது
நாடே கவனிக்கும் நிகல்வு காலை 7.58 க்கு நடக்கிறது
அப்துல் கலாம் தான் திட்ட இயக்குனர் பொட்டு தூக்கம் இல்லாமல் வாரக்கணக்கில் உழைத்த அயர்வு கண்ணில் இல்லை .
முதல் இரண்டு கட்ட மோட்டார் சரியாக வெற்றிகரமாக இயங்க அடுத்த கட்டமாக ராக்கெட் செயல் இழந்து கடலில் விழுகிறது
23 மீட்டர் உயரமும் 17 டன் எடையும் உடைய ராக்கெட் 317 வினாடிகளில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்தது
எல்லோருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்,கவலை, விரக்தி
ஆய்வுக்குழு அமைக்கப்படுகிறது. அதில் ராக்கெட் கடலில் விழுவதற்கு காரணங்கள் ஆராய படுகிறது அதில் ராக்கெட்டின் 3 வது கட்டதில் எரிபொருளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வில்லை கூடுதலாக ஆக்ஸிஜன் வழங்கும் nitric அமிலம் அடங்கிய டாங் கில் கசிவு இருந்தது தெரிய வருகிறது
ஆய்வு அறிக்கை முடிந்ததும் குழு கூடுகிறது அதில் விஎஸ்எஸ்சி இயக்குனர் பிரம்ம பிரகாஷ் அவர்கள் திட்டம் தோல்வி அடைந்ததர்க்கான காரணம் தொழில் நுட்ப கோளாறு தான் என முன்மொழிகிறார்
மிகவும் மன சோர்வாக இருந்த அப்துல் கலாம் உடனடியாக எழுந்து கூட்டத்தின் நடுவில் வந்து பேராசிரியர் தவானிடம் சார் தொழில்நுட்ப காரணங்களை சொல்லி எனது நண்பர்களிடம் தோல்வியை நியாய படுத்தினாலும் திட்டதிர்க்கான தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் .
ராக்கெட் ஏவ கவுண்டவுன் தொடங்கும்போதே nitric அமிலம் கசிவது தெரிந்தது . உடனே திட்டத்தினை நிறுத்திருக்க வேண்டும் என கூறினார்
பிரம்ம பிரகாஷ் அவர்கள் அமைதியாக கூறியது என்ன தெரியுமா கலாம் கூடிய விரைவில் சுற்றுவட்டப்பாதையில் இருப்பார்..
கலாமின் கனவும் நிறைவேறியது .. அதற்க்கு கலாமின் அயராத உழைப்பும் முயற்சியும் அளப்பரியது
No comments:
Post a Comment