சிங்கம் காட்டிற்க்கு ராஜாவாக இருப்பது எல்லோரும் அறிந்ததே நீ சிங்கமாய் இருக்க ஆசைப்படு
கற்றுக்கொள்வதில் நீ சிங்கமாக இருக்க வேண்டும் என்பது தான் உன்னுடைய ஆசிரியருக்கும் உன்னுடைய பெற்றவர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசையாக இருக்கும்
தெருவின் ஓரங்களில் சுற்றித் திரியும் "நாய்" கூட்டங்களை பார்த்து இருந்தால் ஒன்றை கவனித்து இருப்பீர்கள் . அந்த நாய்களுக்கு முன்னால் யேதாவது ஒன்றை தூக்கி வீசி பாருங்கள், அந்த நாயானது நீங்கள் தூக்கி போட்ட பொருளை தேடி ஓடும் . அது நாயின் இயல்பு
நீங்கள் சிங்கத்தின் குணத்தை அறிந்து வைத்திருந்தால் நிச்சயம் தெரியும் சிங்கத்தின் குறி நீங்கள் போடும் பொருளை பார்த்து இருப்பது இல்லை அதன் குறி தெளிவாக அதை வீசுபவரை பார்த்து இருக்கும்
உன்னுடைய வாழக்கையிலும் அப்படி தான் நீ என்ன செய்தாலும் குற்றம் குறை கண்டுபிடிக்க ஒரு கூட்டமே உன்னை சுற்றி இருக்கும். உன்னை சுற்றி உள்ள அனைவரும் உன் எண்ண ஓட்டதிர்க்கு உடன் பட வேண்டும் என நீ நினைத்தால் அதற்க்கு கனவிலும் "சாத்தியம்" இல்லை
உன்னிடம் நீயே சொல்லிக்கொல்
மாணவனாக இருந்தால் கற்பதில் அதி ஆர்வம் காட்டு
நண்பர்களில் நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொள்
வேலை இடங்களிலும் கற்றுக் கொள் அறிவை பெருக்கி கொண்டே இரு மகிழச்சி தரும் செயல்களை தவிர்க்காமல் செய் நேர்மறை எண்ணங்களை தினம் தினம் சிந்தி கெட்ட விஷயங்களிலும் நல்லதை பார்
எழுத்திலும் பேச்சிலும் சிந்தனையிலும் புத்துணர்ச்சி உடன் இருந்து செயல்படு
No comments:
Post a Comment