ஜார்ஜ் பெர்னாட்ஷா பற்றி உங்களில் பெரும்பாலான பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்...
அவர் எழுதிய ஒரு வாசகம் என்னை கவர்ந்தது போல உங்களையும் கவரும் என்ற ஆவல் உள்ளதால் பதிவிடுகிறேன்...
அந்த தகவல் என்ன என்றால்..
இந்த உலகில் உள்ள எல்லா தரப்பு மக்களும்,அதாவது நல்லவர்கள் கெட்டவர்கள் உட்பட எல்லா மனிதர்களும் உலகிற்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொள்கிரார்கள்...பிறவிக்கடன் என்பது வாழ்க்கையை அனுபவிப்பது தன் குடும்பம் தன் மகன்,தன் மனைவி,தன் கணவன் என்ற சுயநல மதிப்பீடுகளை மட்டும் கொண்டு செயல் படுகிறான்...
மது மத சினிமா போதைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் தானும் கெட்டு தன்னுடன் இருக்கும் மனிதர்களையும் கெடுக்கிறான்....
பணத்தால் மட்டும் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்று பேராசைப் படுகிறான்..
காமத்தால் தானும் கெட்டு பிற குடும்பங்களையும் அவமான படுத்துகிறான்...
இயற்கையை நேசிககாமல் அதை அழிக்கும் மனிதர்களுக்கு எதிராக குரல் குடிக்க திறன் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறான் ..
குற்ற சம்பவங்களை ரசிக்கிறான்
எதிர்கால தலைமுறை யை யோசிப்பதில்லை....
நாட்டுப்பற்று மொழிப்பற்று இனப்பற்று இல்லை அவனுக்கு...
ஆனால் சில முரண்பட்ட மனிதர்கள் உள்ளார்கள்.அந்த மனிதர்கள் மட்டுமே தாங்கள் விரும்பிய வண்ணம் இந்த உலகத்தை மாற்றியமைக்க சளைக்காமல் பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்
எதிர்கால தலை முறை ஊக்கதுடனும் அறத்துடனும்...மனிதர்களை மதித்து நடக்கவும் சூழலை பாதுகாக்கவும்,பசி பஞ்சம் பட்டினி இல்லாமல் மக்கள் வாழவும்...
கல்வி மருத்துவம் சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கும் படி ஒரு உயரிய கட்டமைப்பை உருவாக்கவும்
மக்கள் மனித நேயத்துடன் செயல்படும் வழிமுறைகளை உருவாக்கும் படியும் சிந்திக்கிறான்
உண்மை என்ன என்றால் இந்த உலகம் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமை கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றது
No comments:
Post a Comment