Sunday, 19 January 2025

சூழ்நிலை கைதி


 வாழ்க்கை என்பது வரம் 

சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்யமுடியுமா...?

முடியாது தானே..!


அதே போல தான் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையும்,அந்தந்த நேரத்தில் வாழ வேண்டும்..

நம்முடைய வாழ்க்கையில் நாம் வெவ்வேறு மனிதர்களை சந்திக்கிறோம்..நாம் சந்திக்கும் மோசமான மனிதர்கள் ,யார் யார் நல்லவர்கள் என்பதை அறிமுகம் செய்கிறார்கள்....


நாம் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளால் தான் நாம் நல்ல ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குகிறோம்


இக்கட்டான சூழ்நிலை வரும்போதெல்லாம் அதை கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல,ஆனால் அதை நீ கடந்து  வருவது உன்னுடைய பொறுப்பு...

கடந்து வா...

காலம் உனக்கு சொல்லும்... நீ எடுத்த முடிவுகளில் சிறந்த முடிவு இதுதான் என்று...

உன்னுடைய சூழ்நிலைகளை நீ கைது செய்

ஒருபோதும் நீ

சூழ்நிலை கைதியாகிவிடாதே...

Saturday, 18 January 2025

பொறுமையே பெருமை


 பொறுமை 

நிழலை போல பொறுமை உன் கூடவே வரும்ப்படி பார்த்துக்கொள்,
அணையின் சிறிய விரிசல் அணையையும் சேர்த்து சுற்றி உள்ள பகுதிகளையும் சேதாரமாக்கும்...

மனித உழைப்பால் அணை மறுபடியும் உருவாகும்,உன் கைவசமாகுமா உன் கோபத்தால் நீ இழந்தது....

பொத்துக்கொண்டுதான் வரும் கோபம் கடந்துபோ,கண்டுக்காமல் போ..பிறர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போ,

நீரோடு சேர்ந்து உப்பு கரைவது போல,பொறுமையோடு சேர்ந்து நீயும் கரைந்து போ...

உன் மனநிலையோடு ஒட்டிப்போகாதவர்கள், நீ எங்கு சென்றாலும் இருக்கத்தான் செய்வார்கள்...
உன்னிடம் சொல்வதற்கு நிறைய பதிலகள் இருந்தும்,உன்னை புரிந்து கொள்ளாதவர்கள் முன் மவுனத்தை கடைபிடித்து பொறுமையுடன் விலகு 

உன்னுடைய பொறுமை உன்னை உச்சியில் ஏற்றாமல் இருக்கலாம் 
நிச்சயம் உன்னை படுகுழியில் தள்ளாமல் இருக்கும்

Thursday, 16 January 2025

எல்லாம் எளிதாக

 சிறகிருப்பது பறப்பதற்குத்தானே

எதெற்குகெடுத்தாலும் ஒரு காரணம் தேடி கண்டுபிடிப்பது தான் இன்றைய நவ நாகரீக தொழில் நுட்பம், நமக்கு தந்த பம்பர் பரிசு


எல்லாம் எளிதாகி விட்டது,எனக்கு நடக்கும்வரை 


தேடி தேடி கற்றுக்கொள்கிறாய் ,
நீ கெட்டுப்போகும் அனைத்து வழிகளையும்,

அவனுடைய கண்ணீர் இந்த "குடத்தை"நிரப்ப வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் , உன்னுடைய கண்ணீர் ஒருநாள் "குளத்தை" நிரப்பும் 


கண்முன்னால் சுத்தமான நல்ல நீரும், அசுத்தமான சாக்கடை சகதியும் இருந்தால் எதில் நீராடுவாய்

சந்தேகமே இல்லை ....!!!

மனிதனின் முதல் கண்டுபிடிப்பு சக்கரம் அது அன்றைய புதுமை
ஆனால் இன்று
சக்கரம் இல்லாமல் கூட நகடலாம்
தொழில்நுட்பம் இல்லாமல் நகர்வே இல்லை

தொழிநுட்பம்தான் இன்றைய புதுமை

நான் விட்ட கண்ணீர் யாரையும் பாதிக்கவில்லை என்பது எவ்வளவு வேதனை..

சம்பாதி
பணத்தோடு சேரத்து நல்ல உறவுகளையும் சம்பாதி

உன் கண்ணீரை துடைக்கவும் கூடவே சேர்ந்து கண்ணீர் வடிக்கவும் நல் உறவுகளை சம்பாதித்துக்கொள்


நீரை விட்டு பாலைமட்டும் குடித்துப்பறக்கும் அன்னப் பறவை போல
நீயும் பற 

ஆம் நீயும் பற அந்த தொழில்நுட்பம் உன்னைப் பயன்படுத்தாமல் ,நீ அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பற..

நீயும் பற

அ. சனநித் 


Thursday, 2 January 2025

நிகழ்காலம் பற்றி சிந்தித்திடு

 மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதன் நிகழ்காலம் குறித்து திளைப்புடன் இருப்பான்.

நான் என்னுடைய எதிர்காலத்தை நினைத்து நினைத்து பயந்துகொண்டோ, அல்லது என்னுடைய கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டோ இருக்கிறேன் என்றால் என்னுடைய நிகழ்காலம் எப்படி இருக்கும் ...

அது மிகவும் கவலையை எனக்கு தரும்..என்னுடைய  இந்த நிமிடம் கவலைப் படுவதற்கும்,பயபடுவதற்கும் மட்டுமே போதுமாக இருக்குமே தவிர,அங்கே எந்தவித நகர்வும் இருக்காது...

ஏற்றுக்கொள்ளுதல்

கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எனக்கு நல்ல அனுபவத்தையும்,இன்ப துன்ப நிகழ்வுகளை சரி சமமாக எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவத்தையும் எனக்கு தரும்பட்சம் ,இயல்பாக என்னுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஏற்றுக்கொண்டு ,ஏற்படும் இடர்களை பார்த்து பயப்படாமல் கவலைப்படாமல் தீர்வுகளை பார்த்து நான் நகர தொடங்குகிறேன்....

செலவழிக்கதே 

நான் குழப்பத்துடன் இருந்தாலோ,எதிர்காலத்தை நினைத்து பயந்துகொண்டு இருந்தாலோ
என்னுடைய விலைமதிப்புள்ள நேரமும் ஆற்றலும் வீணாக ஆகிறது என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்..



அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...