நாம் நினைத்தது எல்லாம் நினைத்த மாதிரியே நடந்துவிட்டால் இந்த பூவுலகில் கவலை என்பதே வர வாய்ப்பில்லை.
கவலை மனிதனின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்னக் கூடிய புற்றுநோய்..
ஒரு தனி மனிதன் இந்த சமுதாயத்தோடு நெருங்கிப் பழகி ஒரு உறவை ஏற்படுத்துகிறான்..
குடும்ப உறவினர்கள் தவிர்த்து நண்பன் நண்பி பெரியவன் சிறியவன் சித்திசித்தப்பா மாமா மாமி அத்தை பெரியப்பா பெரியம்மா என்று பலதரப்பட்ட மனிதர்களிடம் சில சில நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டு நாட்களை கழிக்கிறான்
பெரும்பாலும் முப்பொழுதும் அடுத்தவர்களின் துணையோடு கழிக்கிறார்கள்..
எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும் மனம் விட்டு பேசும் நபர்கள் மிக மிகக் குறைவு...
அதிகபட்ச உரிமை அவனுக்கு அடுத்தவர்கள் சொல்படி நடப்பதுதான்....இல்லையென்றால் அந்த உறவு நீடிப்பது கடினம்...
இப்படி குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப்பட்டு சிறுவயது முதலே ஒரு நல்ல நினைவு என்றால் பத்து கெட்ட நினைவு என்று இதயத்தில் தங்குகிறது...
நாளடைவில் வரும் பொருளாதார நெருக்கடியும் , தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாலும் ஒரு பாரம் ஆட்கொள்கிறது ...
மேற்கொண்டு அவனே அவனை தனிமை படுத்தும் நிகழ்வு...அவன் பாதையில் நடந்த கெட்ட நினைவுகளை நினைத்து நினைத்து நொந்துகொண்டு....வேதனையில் தவிக்கிறான்...
மீண்டு வரலாம்! மீண்டும் வரலாம்
கவலைப் படும் நேரம் உங்களை செதுக்கலாம்...
தனிமையை சரியாக பயன்படுத்தினால் முன்னேறலாம்....
பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !