ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை....
இது சரி இது தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை...
உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை..
ஊடகங்களுக்கு வெளிப்படைத் தன்மை கிடையாது
ஊடகம் பணமும் அதிகாரமும் உள்ளவர்களிடமும் பம்மும்
இது தேவை இது தேவையற்றவை என்பதை ஊடகங்கள் பேசுவதில்லை...
மக்கள் பிரச்சனைகளை மக்களிடம் விளக்கி எது தீர்வு என்பதை ஊடகங்கள் பேசுவதில்லை...
ஊடகங்கள் நடுநிலையானவை இல்லை...
ஒரு தனிநபரின் ஊதுகுழல் தான் இந்த ஊடகம்....
விறகு விற்பவன் கையில் கிடைத்த புல்லாங்குழல் தான் இந்த ஊடகம்..
கழுதை கையில் கிடைத்த ரூபாய் நோட்டு கட்டுகள் தான் இந்த ஊடகம்..
தெருவில் கிடக்கும் மலத்தை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கும் பணியை ஊடகம் செய்கிறது ...
ஊரே ஓடினால் ஒத்து ஓடு என்ற பழமொழிக்கு ஏற்ப ஓடும் அன்பு உறவுகளே....
சற்று சிந்தித்து சரியான பக்கம் ஓடுங்கள்...
தவறான பாதையில் பயணிக்கிறோம் என்ற புரிதல் வரும்போது சீக்கிரம் திரும்பி வா...எவ்வளவு சீக்கிரம் திரும்பி வருகிறாயோ அவ்வளவு பணமும்,நேரமும் மிச்சம்....
நாம் ஒவ்வொருவரும் ஊடகமாக மாறுவோம்...
