Tuesday, 26 December 2023

மன வலி

எந்த ஒரு கவலையும் இல்லாமல் திரியும் இளம்பிராயம் தான் ஒரு பெரிய மன வலிக்கு திருப்புமுனையாக அமையும் என்பது பெரும்பாலும் அப்புறம் தான் தெரிய வரும்..

பள்ளிப்பருவத்தில் நிம்மதியாக இருந்த நியாபகம்...துள்ளித் திரிந்த அந்த நாட்கள் தான் நரகம் என்று அந்த சொர்க்கத்தை இழந்து நிற்கிறோம்...

பழைய நினைவுகள் எவ்வளவு மகிழ்ச்சியை தந்தாலும் அது ஏன் தொடரவில்லை என்று ஒரு கோவம் வருகிறது ..

வாழ்க்கை என்றால் வாழ்வதற்கு தானே ... அப்போ ஏன் நாட்கள் கடினமாக கடக்கிறது...

மீதி நாட்கள் நிம்மதி இல்லாமல் தான் கடக்க வேண்டுமா...

வீட்டில் வீதியில் வேலையில் உறவுகளில் நண்பர்களிடம் பிள்ளையிடம் மனைவியிடம் இப்படி எல்லோரிடமும் சந்தோசம் இருப்பதாய் எத்தனை நாட்கள் நடிக்க...

எதையும்,எந்த சூழ்நிலையையும்,எந்த சவால் களையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இனி வருவது, என்னில் வளர்வது,வளர்ப்பது எப்போது....

வலியுடன்...

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...