Saturday, 27 January 2024

கடலுக்கு உண்டு தமிழுக்கு இல்லை கட்டுப்பாடு

 தமிழை நாம் உயர் தனி செம்மொழி என்கிறோம் 

இப்பொழுது உள்ள அரசியல் கால சூழ் நிலையில் நாம் தமிழ் மொழியை பேசுகிறோமா .. இல்லை என்பது தான் பதிலாக உள்ளது . 

நாமே நமது தாய் மொழி தமிழை பேச வில்லை என்றால் நமது தலைமுறை பிள்ளைகள் எங்கனம் தமிழ் பேசுவார்கள் ..??????

ஆக நம்மால் பேசமுடிய வில்லை தமிழ் பேசினால் அசிங்கம் அவமானம் என நம்முடய அக்கம் பக்கத்தவர் நினைக்கும் நிலை உருவாகி விட்டது 

உருவாக்கி விட்டார்கள் என நினைக்கிறேன் ஆளும் கட்சிகள் சுயநலம் பார்த்ததன் விளைவு நாம் தமிழ் மொழி இழிவு என நினைத்துக் கொண்டு அயல் மொழிகளை பெருமையாக சாதனையாக நினைக்கிறோம் .. 

தமிழ் வரலாறுகளினை தேடி தேடி படித்து நாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டும்.. 

குறைந்த பட்சம் நம்முடைய பதிவுகளை தமிழில் பதிவிடலாம் 

நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களினை வைக்கலாம் .. 

தமிழ் வளர்க்கும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம் 

தமிழ் வாழ்க ..!!!!!

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...