Sunday, 22 May 2022

விளையும் பயிர் முளையிலே தெரியும்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

மே - 22/2022


 
மக்கள் இளமையிலேயே திறனுடன் செயல்பட்டு அறிவாற்றலுன் முன்னேற வேண்டும் என்பதை கூறும் பழமொழி...


சில காய்கள் பிஞ்சிலேயே பழுத்து பயனற்று போவதுண்டு.,
பயிர் முளையிலேயே செழுமை பெறவில்லை எனில்,பிறகு முற்றி முதிர்ந்து மேனி கண்டு விளைச்சல் தருவது எவ்வாறு...?
ஓர் இளைஞர் இளமையில் செயல் ஆற்றுவதைக் கொண்டு இவர் முன்னுக்கு வருவார்,இவர் உருப்படமாட்டார் எனத் தெரிந்துகொள்ளலாம்....

உழவு செய்ய வேண்டிய காலத்தில் ஊர் சுற்றிவிட்டு,அறுவடை காலத்தில் அரிவாள் எடுத்துக் கொண்டு போனால் எதை அறுவடை செய்வது...?இது மக்களின் உழைப்பு அல்லது சோம்பல் நிலைக்கும் பொருந்தும் ..

இளமையில் உழைக்காமல் ஊர் சுற்றியவர்கள் பின்னர் எதிர்பாரா விதமாய் பெரிய அளவில் முன்னேறியதும் உண்டு....இது சிறுபான்மையே..? இளமையில் ஊக்கம் காட்டாதவர்கள் பின்னர் முன்னேறாமையும்,இளமையில் ஊக்கம் காட்டியவர்கள் பின்னர் முன்னேறியதுமே தான்  பெரும்பான்மையான நிலைமை....

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையுமா"

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...