Monday, 23 May 2022

பட்டம் தவறினால் நட்டம்

 பட்டம் தவறினால் நட்டம்

மே - 23/2022


பட்டம் தவறினால் நட்டம்..
கருத்து :பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை. பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

 பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் தான் 'பட்டம் தவறினால் நட்டம்' என்ற பழமொழி வந்தது.

 தமிழ் மாதங்களை கணக்கிட்டு அந்தந்த பட்டத்துக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வார்கள். தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் காலம் என்பதால் புரட்டாசி பட்டம் சிறப்பு பெறுகின்றது. 

புரட்டாசி பட்டத்தில் கத்தரி, கீரை, முள்ளங்கி , பூசணி, முருங்கை, பீர்க்கன், சிறு தானியங்கள் பயிரிடுவர்.


No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...