அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மே 29/2022
நம்முடைய உள்ள உணர்ச்சிகளை கண்ணாடி போல காட்டுவது நம் முகமே..
ஒப்பனையால் ஒருவர் அழகாகி விட முடியாது. உள்ளத்தூய்மையால் மட்டுமே ஒருவர் நேசிக்கின்ற - விரும்புகின்ற தூய்மையை பெற முடியும்...ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.
கவலை இல்லாத மனிதன் மிக குறைவு..கவலைகளை கடந்து நம் அருகில் இருப்பவர்களிடம் சிரித்து மகிழ்வோம் நம் கவலை நமக்கு வேண்டியவர்களுக்கும் கவலையை உண்டாக்கிவிடக் கூடாது...

No comments:
Post a Comment