வணக்கம்
அன்பு
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்..
நாம் அடிக்கடி கேட்கும் பழமொழிகளில் இதுவும் ஒன்று
இதன் பொருள் தான் என்ன...?
நாம் அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு - ஊராரின் பிள்ளைகளுக்கு நல்ல உணவளித்து, அன்புகாட்டி,கருணையுடன் நன்மை செய்து வந்தால் ,நம் பிள்ளைகளுக்கு அந்த இறைவன் துணைநிர்ப்பான் என்பதே இதன் பொருள் ஆகும்.
"பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும்"
என்ற முதுமொழியும் இதற்கு உண்டு..
ஆனால் இக்காலத்தவர்கள்
தன் வீட்டுக்கு வந்த இன்னோர் வீட்டு பெண்ணான மருமகளை (ஊரார் வீட்டுப்பிள்ளை) நல்ல முறையில் மதிப்பளித்து,உணவளித்து,ஆதரித்து வந்தால் அவள் வயிற்றில் வளரும் தன் வீட்டுப்பில்லை (நம் வீட்டு வாரிசு) நல்ல முறையில் வளரும் என்பதே இப்பழமொழி கூறும் விளக்கம் என்று கூறுகின்றனர்..
இப்பழமொழி கூறும் அர்த்தம் ஏதுவாக இருந்தாலும் தன்வீட்டுப் பிள்ளை ஊரார் வீட்டுப் பிள்ளை என பேதம் பாராட்டாது,அனைத்து பிள்ளைகளிடமும் அன்பு காட்டி வாழ வேண்டும்....

No comments:
Post a Comment