Monday, 30 May 2022

பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

மே 30/2022


பழ இலையை பார்த்து பச்சை இலை சிரிக்கிறது...

காற்றடித்தால் விழுந்து விடும் காய்ந்த பனை ஓலையின் பரிதாப நிலையை பார்த்து, பச்சை ஓலை சிரிக்கிறது.
அதன் இளமையும் பசுமையும் அந்த நய்யாண்டி சிரிப்பில் தெரிகிறது..
பழுத்து தொங்கும் ஓலையும் ஒரு நாள் குருத்தோலை யாக இருந்தது தான்...

பிறரின் வீழ்ச்சியில் நாம் சிரிக்கும் போது  நமக்கும் அக்கதி ஒரு நாள் வரும் என்பதை மறந்து விடுகின்றோம்.

மூப்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்று,முதுமையும் தள்ளாமையும் என்றோ ஒரு நாள் நமக்கும் வந்தே தீரும்..

மூதவர்களுக்கு மரியாதை செய்வோம்..
தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை ஏளனம் செய்யாமல் இருப்போம்..

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...