Friday, 20 May 2022

புலி பசிச்சாலும் பிள்ளையை தின்னாது..

 புலி பசிச்சாலும் பிள்ளையை தின்னாது

மே - 20/2022

மிகப் பழமையான பழமொழி என்பதால் நாம் அன்றாடம் பேசும் சொல்வழக்கில்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ...என்றாகி விட்டது..

 இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னதான் என்று பார்ப்போம்.....?

புலி பசித்தாலும் பிள்ளையை தின்னாது என்பது தான் சரியான சொலவடை...

பொதுவாக ஊண் உண்ணும் விலங்குகள் தன்னுடைய குட்டிகளை ஈனும் போது மிகப்பசியாக இருக்கும்...அப்போது தன்னுடைய முதல் குட்டியை தின்றுவிடும்.
இது நம் வீட்டு விலங்குகளுக்கும் பொருந்தும்...
குறிப்பாக காட்டு விலங்குகள்.....
இதில் புலி சற்று மாறுபட்ட விலங்கு

புலி எவ்வளுவு தான் கடும்பசியில் வாடினாலும் தன்னுடைய குட்டிகளை தின்பதில்லை...இந்த பழக்கத்தை சிறப்பாக கூறும் பொருட்டே "புலி பசித்தாலும். பிள்ளையை தின்னாது" என்றானது...

தாவர உண்ணிகள் தன்னுடைய குட்டிகளை உண்ணுவதில்லை..
(யானை ,முயல்,பசு)
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளும்,
பாம்பு வகைகளும் 
தன்னுடைய குட்டிகளை தின்பதில்லை ..!
நன்றி ..!!!


No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...