தங்கத்தை மஞ்சள் சேர்த்து அரைத்து குழைத்து தெளித்தது போல சிதில் சிதிலாக மின்னும் மேகக் கூட்டத்தின் ஊடே பறவைகள் தன்னுடைய கூடை நோக்கி பயணம் செய்யும் ரம்மியமான காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த குழந்தைகளை பார்த்தேன்.
கீ கீ என்று கூட்டிர்க்குள் குதித்த கிளியை அருகில் உள்ள புல்லை பறித்து இரண்டாக கிழித்து அதற்கு ஊட்டி விட்டுகொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.
பூத்துக்குலுங்கும் வண்ணப்பூக்கள் உள்ள பூங்கா ஆதலால் சுற்றி சுற்றி வந்த குழந்தைகள் வண்ண வண்ண பூக்களை சேகரித்து விளையாடியது. ஊஞ்சலை பார்த்த அந்த இரண்டு குழந்தைகளும் ஓடியது.
யார் முதலில் ஆட வேண்டும் என்பதற்கு சண்டையிட்டுக் கொண்டே அதற்கு ஒரு போட்டியையும் தீர்மானித்த குழந்தைகள் போட்டிக்கு ஓட்டப் பந்தயத்தை வைத்தது..
ஜெயித்த குழந்தை முதலில் ஆடும்போது இன்னொரு குழந்தை ஊஞ்சலை ஆட்ட மாறி மாறி ஆடினர்..
அருமையான நாள்...
No comments:
Post a Comment