அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
ஜூன்1/2022
அடம்பன் என்பது கடற்கரையில் காணப்படும் ஒரு வலுவிழந்த கொடி வகையாகும்.. கால்விரல்களில் பிடிபட்டால் கூட உடைந்துவிடும்
மிகவும் பலவீனமான கொடி கூட ஒன்றாகக் கட்டப்பட்டால் பலமானதாகிவிடும்.
எளிதில் அறுத்துவிட முடியாது...காரணம் அவை ஒன்றாக சேர்ந்துருப்பதாலேயே...
போட்டியும் பொறாமையும் நிறைந்த இன்றைய உலகில் மனிதன் தனித்து வாழமுடியாது ..ஒரு தனிமனிதனை மற்றொரு தனிமனிதன் எளிதில் வென்றுவிடலாம்.பல பேருடன் "ஒற்றுமை"யாக சேர்ந்து நின்றால் அவனை வெற்றி கொள்ளல் எளிதல்ல...
ஒற்றுமையே பலம் என்ற உண்மையே உணர்த்தும் இப்பழமொழியைய் நாம் அனைவரும் தம் வாழ்க்கையில் பயன்படுத்தி நன்மை பெறவேண்டும்....

No comments:
Post a Comment