Wednesday, 1 June 2022

அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

 அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

மே 2/2022


உறவு இல்லை என்றாலும் உரிமை உண்டு.

வான் முட்டும் பாரம் ஆயினும் அசாதாரணமாக சுமக்க முடியும் நட்பு மட்டும் உடன் இருந்தால்

"நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம் 
நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறியலாம்."

நமக்கு அநேகம் பேர் நண்பர்களாக இருக்கலாம்
அவர்கள் அனைவரும் உண்மையான நண்பர்கள் என கூறி விட முடியாது .

சிரித்து சிரித்து பரிவாக பேசி கூடவே இருந்தாலும் நம் வீழ்ச்சிக்கு ஆர்வமாக காத்திருக்கும் நண்பர்களுக்கு மத்தியில்,
நாம் கூனிக் குறுகி, மனம் உடைந்து,தைரியம் இழந்து,சோர்ந்து,பிறர் முகம் பயந்து ஒழியும் போதும், உறுதி ஊட்டும் உற்சாக வார்த்தைகளால் மனதினை உசுப்பி ,எழுச்சி தருவது மட்டும் இல்லாமல்,என்னையும்,என் சூழ்நிலையையும் புரிந்துகொண்டு உடனிருக்கும் நட்பு கிடைப்பது அபூர்வமே...

‌நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது உண்மையான சிநேகிதனை எதார்த்தமாக தெரிந்து கொள்ளலாம்.....



No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...