ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே
ஜூன் 2/2022
மரங்களின் பயன்பாடுகளில் ஒன்று அவைதரும் பழங்களாகும்.பழம் தரும் மரங்களையே அனைவரும் விரும்புவர்.பறவைகள் அம்மரத்தில் உள்ள பழங்களை உண்டு பின்னர் வேறு பழம் உள்ள மரங்களை நாடிச்செல்லும்.இது அனுபவப் பூர்வமாக நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்.ஆலமரம் பழுத்தால் அதனை நாடிச்செல்லும் பறவைகள் ,அரசமரம் பழுத்ததும் அதனை நாடிச்செல்கின்றனவாம்
இதுபோன்று ஒருவன் செல்வ செழிப்புடன், மிக்க வசதி வாய்ப்புடன் இருக்கும் போது சில நண்பர்களும்,உறவினர்களும் வலிய சென்று உறவாடுவர்.அவனது பெருமைகளை பேசி நன்மைகளை பெறுவர்.
அவன் செல்வம் குன்றி வறுமை அடைகிறான் எனில் அவனை விட்டு விலகி வேறு செல்வந்தர்களை தேடி செல்வர்
இந்த உலக வழக்கையே "ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே"
எனும் பழமொழி நமக்கு நன்குணர்த்துகிறது...

No comments:
Post a Comment