ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்
ஜூன் 2/2022
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்" என்பதன் சரியான விளக்கம் என்ன?
ஆடும் ஓநாயும் நண்பர்களல்ல அவரவர் துக்கங்களில் பங்குபற்றிக் கொள்ள!
ஓநாய்க்கு ஆடு சாப்பிடக் கிடைத்தால் சந்தோஷம். அது நனைந்தால் என்ன, வெயிலில் நின்றாலென்ன? ஓநாய்க்கு தேவை மாமிசந்தான்...
மனிதர்களுள் இப்படிப் பலர் இருக்கிறார்கள். பிறருக்கு கேடு வராமல் பாதுகாப்பது போல் நடிப்பார்கள். போலி அனுதாபமும் நடிப்பும், உண்மையில் கெடுத்து அழிப்பதற்காகவே இருக்கும்.
இது நம்முள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பழமொழி! அனுதாபம் காட்டுகிறார்களே, அன்பாகப் பழகுகிறார்களே என்று கருதி ஏமாந்து விடக் கூடாது

No comments:
Post a Comment